Skip to content
Thamizh Koodam — A global home for Tamil culture and community

8. The Possession of Love

அன்புடைமை

Virtue (அறத்துப்பால்) · Domestic Virtue (இல்லறவியல்) · kurals 71–80
Kural number
Show beside each kural
“அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.”
— திருக்குறள் 71 · அன்புடைமை

Is there any fastening that can shut in love ? Tears of the affectionate will publish the love that is within.

“அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.”
— திருக்குறள் 72 · அன்புடைமை

Those who are destitute of love appropriate all they have to themselves; but those who possess love consider even their bones to belong to others.

“அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.”
— திருக்குறள் 73 · அன்புடைமை

They say that the union of soul and body in man is the fruit of the union of love and virtue (in a former birth).

“அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு.”
— திருக்குறள் 74 · அன்புடைமை

Love begets desire: and that (desire) begets the immeasureable excellence of friendship.

“அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.”
— திருக்குறள் 75 · அன்புடைமை

They say that the felicity which those who, after enjoying the pleasure (of the conjugal state) in this world, obtain in heaven is the result of their domestic state imbued with love.

“அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.”
— திருக்குறள் 76 · அன்புடைமை

The ignorant say that love is an ally to virtue only, but it is also a help to get out of vice.

“என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.”
— திருக்குறள் 77 · அன்புடைமை

Virtue will burn up the soul which is without love, even as the sun burns up the creature which is without bone, i.e. worms.

“அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.”
— திருக்குறள் 78 · அன்புடைமை

The domestic state of that man whose mind is without love is like the flourishing of a withered tree upon the parched desert.

“புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.”
— திருக்குறள் 79 · அன்புடைமை

Of what avail are all the external members (of the body) to those who are destitute of love, the internal member.

“அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.”
— திருக்குறள் 80 · அன்புடைமை

That body alone which is inspired with love contains a living soul: if void of it, (the body) is bone overlaid with skin.