Skip to content
Thamizh Koodam — A global home for Tamil culture and community

7. The Wealth of Children

புதல்வரைப் பெறுதல்

Virtue (அறத்துப்பால்) · Domestic Virtue (இல்லறவியல்) · kurals 61–70
Kural number
Show beside each kural
“பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.”
— திருக்குறள் 61 · புதல்வரைப் பெறுதல்

Among all the benefits that may be acquired, we know no greater benefit than the acquisition of intelligent children.

“எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.”
— திருக்குறள் 62 · புதல்வரைப் பெறுதல்

The evils of the seven births shall not touch those who abtain children of a good disposition, free from vice.

“தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.”
— திருக்குறள் 63 · புதல்வரைப் பெறுதல்

Men will call their sons their wealth, because it flows to them through the deeds which they (sons) perform on their behalf.

“அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.”
— திருக்குறள் 64 · புதல்வரைப் பெறுதல்

The rice in which the little hand of their children has dabbled will be far sweeter (to the parent) than ambrosia.

“மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.”
— திருக்குறள் 65 · புதல்வரைப் பெறுதல்

The touch of children gives pleasure to the body, and the hearing of their words, pleasure to the ear.

“குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.”
— திருக்குறள் 66 · புதல்வரைப் பெறுதல்

"The pipe is sweet, the lute is sweet," say those who have not heard the prattle of their own children.

“தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.”
— திருக்குறள் 67 · புதல்வரைப் பெறுதல்

The benefit which a father should confer on his son is to give him precedence in the assembly of the learned.

“தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.”
— திருக்குறள் 68 · புதல்வரைப் பெறுதல்

That their children should possess knowledge is more pleasing to all men of this great earth than to themselves.

“ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.”
— திருக்குறள் 69 · புதல்வரைப் பெறுதல்

The mother who hears her son called "a wise man" will rejoice more than she did at his birth.

“மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.”
— திருக்குறள் 70 · புதல்வரைப் பெறுதல்

(So to act) that it may be said "by what great penance did his father beget him," is the benefit which a son should render to his father.