Skip to content
Thamizh Koodam — A global home for Tamil culture and community

6. The Worth of a Wife

வாழ்க்கைத் துணைநலம்

Virtue (அறத்துப்பால்) · Domestic Virtue (இல்லறவியல்) · kurals 51–60
Kural number
Show beside each kural
“மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.”
— திருக்குறள் 51 · வாழ்க்கைத் துணைநலம்

She who has the excellence of home virtues, and can expend within the means of her husband, is a help in the domestic state.

“மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.”
— திருக்குறள் 52 · வாழ்க்கைத் துணைநலம்

If the wife be devoid of domestic excellence, whatever (other) greatness be possessed, the conjugal state, is nothing.

“இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?”
— திருக்குறள் 53 · வாழ்க்கைத் துணைநலம்

If his wife be eminent (in virtue), what does (that man) not possess ? If she be without excellence, what does (he) possess ?

“பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.”
— திருக்குறள் 54 · வாழ்க்கைத் துணைநலம்

What is more excellent than a wife, if she possess the stability of chastity ?

“தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.”
— திருக்குறள் 55 · வாழ்க்கைத் துணைநலம்

If she, who does not worship God, but who rising worships her husband, say, "let it rain," it will rain.

“தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.”
— திருக்குறள் 56 · வாழ்க்கைத் துணைநலம்

She is a wife who unweariedly guards herself, takes care of her husband, and preserves an unsullied fame.

“சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.”
— திருக்குறள் 57 · வாழ்க்கைத் துணைநலம்

What avails the guard of a prison ? The chief guard of a woman is her chastity.

“பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.”
— திருக்குறள் 58 · வாழ்க்கைத் துணைநலம்

If women shew reverence to their husbands, they will obtain great excellence in the world where the gods flourish.

“புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.”
— திருக்குறள் 59 · வாழ்க்கைத் துணைநலம்

The man whose wife seeks not the praise (of chastity) cannot walk with lion-like stately step, before those who revile them.

“மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.”
— திருக்குறள் 60 · வாழ்க்கைத் துணைநலம்

The excellence of a wife is the good of her husband; and good children are the jewels of that goodness.