Skip to content
Thamizh Koodam — A global home for Tamil culture and community

9. Hospitality

விருந்தோம்பல்

Virtue (அறத்துப்பால்) · Domestic Virtue (இல்லறவியல்) · kurals 81–90
Kural number
Show beside each kural
“இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.”
— திருக்குறள் 81 · விருந்தோம்பல்

The whole design of living in the domestic state and laying up (property) is (to be able) to exercise the benevolence of hospitality.

“விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.”
— திருக்குறள் 82 · விருந்தோம்பல்

It is not fit that one should wish his guests to be outside (his house) even though he were eating the food of immortality.

“வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.”
— திருக்குறள் 83 · விருந்தோம்பல்

The domestic life of the man that daily entertains the guests who come to him shall not be laid waste by poverty.

“அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.”
— திருக்குறள் 84 · விருந்தோம்பல்

Lakshmi with joyous mind shall dwell in the house of that man who, with cheerful countenance, entertains the good as guests.

“வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.”
— திருக்குறள் 85 · விருந்தோம்பல்

Is it necessary to sow the field of the man who, having feasted his guests, eats what may remain ?

“செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு.”
— திருக்குறள் 86 · விருந்தோம்பல்

He who, having entertained the guests that have come, looks out for others who may yet come, will be a welcome guest to the inhabitants of heaven.

“இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.”
— திருக்குறள் 87 · விருந்தோம்பல்

The advantages of benevolence cannot be measured; the measure (of the virtue) of the guests (entertained) is the only measure.

“பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.”
— திருக்குறள் 88 · விருந்தோம்பல்

Those who have taken no part in the benevolence of hospitality shall (at length lament) saying, "we have laboured and laid up wealth and are now without support."

“உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.”
— திருக்குறள் 89 · விருந்தோம்பல்

That stupidity which excercises no hospitality is poverty in the midst of wealth. It is the property of the stupid.

“மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.”
— திருக்குறள் 90 · விருந்தோம்பல்

As the Anicham flower fades in smelling, so fades the guest when the face is turned away.