Skip to content
Thamizh Koodam — A global home for Tamil culture and community

60. Energy

ஊக்கமுடைமை

Wealth (பொருட்பால்) · Royalty (அரசியல்) · kurals 591–600
Kural number
Show beside each kural
“உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று.”
— திருக்குறள் 591 · ஊக்கமுடைமை

Energy makes out the man of property; as for those who are destitute of it, do they (really) possess what they possess ?

“உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.”
— திருக்குறள் 592 · ஊக்கமுடைமை

The possession of (energy of) mind is true property; the possession of wealth passes away and abides not.

“ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார்.”
— திருக்குறள் 593 · ஊக்கமுடைமை

They who are possessed of enduring energy will not trouble themselves, saying, "we have lost our property."

“ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை.”
— திருக்குறள் 594 · ஊக்கமுடைமை

Wealth will find its own way to the man of unfailing energy.

“வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.”
— திருக்குறள் 595 · ஊக்கமுடைமை

The stalks of water-flowers are proportionate to the depth of water; so is men's greatness proportionate to their minds.

“உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.”
— திருக்குறள் 596 · ஊக்கமுடைமை

In all that a king thinks of, let him think of his greatness; and if it should be thrust from him (by fate), it will have the nature of not being thrust from him.

“சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு.”
— திருக்குறள் 597 · ஊக்கமுடைமை

The strong minded will not faint, even when all is lost; the elephant stands firm, even when wounded by a shower of arrows.

“உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னுஞ் செருக்கு.”
— திருக்குறள் 598 · ஊக்கமுடைமை

Those who have no (greatness of) mind, will not acquire the joy of saying in the world, "we have excercised liaberality".

“பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.”
— திருக்குறள் 599 · ஊக்கமுடைமை

Although the elephant has a large body, and a sharp tusk, yet it fears the attack of the tiger.

“உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்
மரம்மக்க ளாதலே வேறு.”
— திருக்குறள் 600 · ஊக்கமுடைமை

Energy is mental wealth; those men who are destitute of it are only trees in the form of men.