Skip to content
Thamizh Koodam — A global home for Tamil culture and community

59. Detectives

ஒற்றாடல்

Wealth (பொருட்பால்) · Royalty (அரசியல்) · kurals 581–590
Kural number
Show beside each kural
“ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்.”
— திருக்குறள் 581 · ஒற்றாடல்

Let a king consider as his eyes these two things, a spy and a book (of laws) universally esteemed.

“எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்.”
— திருக்குறள் 582 · ஒற்றாடல்

It is the duty of a king to know quickly (by a spy) what all happens, daily, amongst all men.

“ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்தது இல்.”
— திருக்குறள் 583 · ஒற்றாடல்

There is no way for a king to obtain conquests, who knows not the advantage of discoveries made by a spy.

“வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று.”
— திருக்குறள் 584 · ஒற்றாடல்

He is a spy who watches all men, to wit, those who are in the king's employment, his relatives, and his enemies.

“கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று.”
— திருக்குறள் 585 · ஒற்றாடல்

A spy is one who is able to assume an appearance which may create no suspicion (in the minds of others), who fears no man's face, and who never reveals (his purpose).

“துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து
என்செயினும் சோர்விலது ஒற்று.”
— திருக்குறள் 586 · ஒற்றாடல்

He is a spy who, assuming the appearance of an ascetic, goes into (whatever place he wishes), examines into (all, that is needful), and never discovers himself, whatever may be done to him.

“மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று.”
— திருக்குறள் 587 · ஒற்றாடல்

A spy is one who is able to discover what is hidden and who retains no doubt concerning what he has known.

“ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்.”
— திருக்குறள் 588 · ஒற்றாடல்

Let not a king receive the information which a spy has discovered and made known to him, until he has examined it by another spy.

“ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும்.”
— திருக்குறள் 589 · ஒற்றாடல்

Let a king employ spies so that one may have no knowledge of the other; and when the information of three agrees together, let him receive it.

“சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை.”
— திருக்குறள் 590 · ஒற்றாடல்

Let not a king publicly confer on a spy any marks of his favour; if he does, he will divulge his own secret.