Skip to content
Thamizh Koodam — A global home for Tamil culture and community

58. Benignity

கண்ணோட்டம்

Wealth (பொருட்பால்) · Royalty (அரசியல்) · kurals 571–580
Kural number
Show beside each kural
“கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு.”
— திருக்குறள் 571 · கண்ணோட்டம்

The world exists through that greatest ornament (of princes), a gracious demeanour.

“கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை.”
— திருக்குறள் 572 · கண்ணோட்டம்

The prosperity of the world springs from the kindliness, the existence of those who have no (kindliness) is a burden to the earth.

“பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்.”
— திருக்குறள் 573 · கண்ணோட்டம்

Of what avail is a song if it be inconsistent with harmony ? what is the use of eyes which possess no kindliness.

“உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண்.”
— திருக்குறள் 574 · கண்ணோட்டம்

Beyond appearing to be in the face, what good do they do, those eyes in which is no well-regulated kindness ?

“கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும்.”
— திருக்குறள் 575 · கண்ணோட்டம்

Kind looks are the ornaments of the eyes; without these they will be considered (by the wise) to be merely two sores.

“மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைந்துகண் ணோடா தவர்.”
— திருக்குறள் 576 · கண்ணோட்டம்

They resemble the trees of the earth, who although they have eyes, never look kindly (on others).

“கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்.”
— திருக்குறள் 577 · கண்ணோட்டம்

Men without kind looks are men without eyes; those who (really) have eyes are also not devoid of kind looks.

“கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்திவ் வுலகு.”
— திருக்குறள் 578 · கண்ணோட்டம்

The world is theirs (kings) who are able to show kindness, without injury to their affairs, (administration of justice).

“ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை.”
— திருக்குறள் 579 · கண்ணோட்டம்

Patiently to bear with, and show kindness to those who grieve us, is the most excellent of all dispositions.

“பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.”
— திருக்குறள் 580 · கண்ணோட்டம்

Those who desire (to cultivate that degree of) urbanity which all shall love, even after swallowing the poison served to them by their friends, will be friendly with them.