Skip to content
Thamizh Koodam — A global home for Tamil culture and community

61. Unsluggishness

மடியின்மை

Wealth (பொருட்பால்) · Royalty (அரசியல்) · kurals 601–610
Kural number
Show beside each kural
“குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்.”
— திருக்குறள் 601 · மடியின்மை

By the darkness, of idleness, the indestructible lamp of family (rank) will be extinguished.

“மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.”
— திருக்குறள் 602 · மடியின்மை

Let those, who desire that their family may be illustrious, put away all idleness from their conduct.

“மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து.”
— திருக்குறள் 603 · மடியின்மை

The (lustre of the) family of the ignorant man, who acts under the influence of destructive laziness will perish, even before he is dead.

“குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு.”
— திருக்குறள் 604 · மடியின்மை

Family (greatness) will be destroyed, and faults will increase, in those men who give way to laziness, and put forth no dignified exertions.

“நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.”
— திருக்குறள் 605 · மடியின்மை

Procrastination, forgetfulness, idleness, and sleep, these four things, form the vessel which is desired by those destined to destruction.

“படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது.”
— திருக்குறள் 606 · மடியின்மை

It is a rare thing for the idle, even when possessed of the riches of kings who ruled over the whole earth, to derive any great benefit from it.

“இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்.”
— திருக்குறள் 607 · மடியின்மை

Those who through idleness, and do not engage themselves in dignified exertion, will subject themselves to rebukes and reproaches.

“மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும்.”
— திருக்குறள் 608 · மடியின்மை

If idleness take up its abode in a king of high birth, it will make him a slave of his enemies.

“குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்.”
— திருக்குறள் 609 · மடியின்மை

When a man puts away idleness, the reproach which has come upon himself and his family will disappear.

“மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.”
— திருக்குறள் 610 · மடியின்மை

The king who never gives way to idleness will obtain entire possession of (the whole earth) passed over by him who measured (the worlds) with His foot.