Skip to content
Thamizh Koodam — A global home for Tamil culture and community

43. The Possession of Knowledge

அறிவுடைமை

Wealth (பொருட்பால்) · Royalty (அரசியல்) · kurals 421–430
Kural number
Show beside each kural
“அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.”
— திருக்குறள் 421 · அறிவுடைமை

Wisdom is a weapon to ward off destruction; it is an inner fortress which enemies cannot destroy.

“சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு.”
— திருக்குறள் 422 · அறிவுடைமை

Not to permit the mind to go where it lists, to keep it from evil, and to employ it in good, this is wisdom.

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.”
— திருக்குறள் 423 · அறிவுடைமை

To discern the truth in every thing, by whomsoever spoken, is wisdom.

“எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு.”
— திருக்குறள் 424 · அறிவுடைமை

To speak so as that the meaning may easily enter the mind of the hearer, and to discern the subtlest thought which may lie hidden in the words of others, this is wisdom.

“உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு.”
— திருக்குறள் 425 · அறிவுடைமை

To secure the friendship of the great is true wisdom; it is (also) wisdom to keep (that friendship unchanged, and) not opening and closing (like the lotus flower).

“எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு.”
— திருக்குறள் 426 · அறிவுடைமை

To live as the world lives, is wisdom.

“அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.”
— திருக்குறள் 427 · அறிவுடைமை

The wise are those who know beforehand what will happen; those who do not know this are the unwise.

“அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.”
— திருக்குறள் 428 · அறிவுடைமை

Not to fear what ought to be feared, is folly; it is the work of the wise to fear what should be feared.

“எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்.”
— திருக்குறள் 429 · அறிவுடைமை

No terrifying calamity will happen to the wise, who (foresee) and guard against coming evils.

“அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.”
— திருக்குறள் 430 · அறிவுடைமை

Those who possess wisdom, possess every thing; those who have not wisdom, whatever they may possess, have nothing.