Skip to content
Thamizh Koodam — A global home for Tamil culture and community

44. The Correction of Faults

குற்றங்கடிதல்

Wealth (பொருட்பால்) · Royalty (அரசியல்) · kurals 431–440
Kural number
Show beside each kural
“செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.”
— திருக்குறள் 431 · குற்றங்கடிதல்

Truly great is the excellence of those (kings) who are free from pride, anger, and lust.

“இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு.”
— திருக்குறள் 432 · குற்றங்கடிதல்

Avarice, undignified pride, and low pleasures are faults in a king.

“தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.”
— திருக்குறள் 433 · குற்றங்கடிதல்

Those who fear guilt, if they commit a fault small as a millet seed, will consider it to be as large as a palmyra tree.

“குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் த்ரூஉம் பகை.”
— திருக்குறள் 434 · குற்றங்கடிதல்

Guard against faults as a matter (of great consequence; for) faults are a deadly enemy.

“வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.”
— திருக்குறள் 435 · குற்றங்கடிதல்

The prosperity of him who does not timely guard against faults, will perish like straw before fire.

“தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு.”
— திருக்குறள் 436 · குற்றங்கடிதல்

What fault will remain in the king who has put away his own evils, and looks after the evils of others.

“செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்.”
— திருக்குறள் 437 · குற்றங்கடிதல்

The wealth of the avaricious man, who does not expend it for the purposes for which he ought to expend it will waste away and not continue.

“பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று.”
— திருக்குறள் 438 · குற்றங்கடிதல்

Griping avarice is not to be reckoned as one among other faults; (it stands alone - greater than all).

“வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.”
— திருக்குறள் 439 · குற்றங்கடிதல்

Let no (one) praise himself, at any time; let him not desire to do useless things.

“காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.”
— திருக்குறள் 440 · குற்றங்கடிதல்

If (a king) enjoys, privately the things which he desires, the designs of his enemies will be useless.