Skip to content
Thamizh Koodam — A global home for Tamil culture and community

40. Learning

கல்வி

Wealth (பொருட்பால்) · Royalty (அரசியல்) · kurals 391–400
Kural number
Show beside each kural
“கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.”
— திருக்குறள் 391 · கல்வி

Let a man learn thoroughly whatever he may learn, and let his conduct be worthy of his learning.

“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு..”
— திருக்குறள் 392 · கல்வி

Letters and numbers are the two eyes of man.

“கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.”
— திருக்குறள் 393 · கல்வி

The learned are said to have eyes, but the unlearned have (merely) two sores in their face.

“உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.”
— திருக்குறள் 394 · கல்வி

It is the part of the learned to give joy to those whom they meet, and on leaving, to make them think (Oh! when shall we meet them again.)

“உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.”
— திருக்குறள் 395 · கல்வி

The unlearned are inferior to the learned, before whom they stand begging, as the destitute before the wealthy.

“தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.”
— திருக்குறள் 396 · கல்வி

Water will flow from a well in the sand in proportion to the depth to which it is dug, and knowledge will flow from a man in proportion to his learning.

“யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.”
— திருக்குறள் 397 · கல்வி

How is it that any one can remain without learning, even to his death, when (to the learned man) every country is his own (country), and every town his own (town) ?

“ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.”
— திருக்குறள் 398 · கல்வி

The learning, which a man has acquired in one birth, will yield him pleasure during seven births.

“தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.”
— திருக்குறள் 399 · கல்வி

The learned will long (for more learning), when they see that while it gives pleasure to themselves, the world also derives pleasure from it.

“கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.”
— திருக்குறள் 400 · கல்வி

Learning is the true imperishable riches; all other things are not riches.