Skip to content
Thamizh Koodam — A global home for Tamil culture and community

39. The Greatness of a King

இறைமாட்சி

Wealth (பொருட்பால்) · Royalty (அரசியல்) · kurals 381–390
Kural number
Show beside each kural
“படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.”
— திருக்குறள் 381 · இறைமாட்சி

He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

“அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.”
— திருக்குறள் 382 · இறைமாட்சி

Never to fail in these four things, fearlessness, liberality, wisdom, and energy, is the kingly character.

“தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனான் பவர்க்கு.”
— திருக்குறள் 383 · இறைமாட்சி

These three things, viz., vigilance, learning, and bravery, should never be wanting in the ruler of a country.

“அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு.”
— திருக்குறள் 384 · இறைமாட்சி

He is a king who, with manly modesty, swerves not from virtue, and refrains from vice.

“இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.”
— திருக்குறள் 385 · இறைமாட்சி

He is a king who is able to acquire (wealth), to lay it up, to guard, and to distribute it.

“காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.”
— திருக்குறள் 386 · இறைமாட்சி

The whole world will exalt the country of the king who is easy of access, and who is free from harsh language.

“இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு.”
— திருக்குறள் 387 · இறைமாட்சி

The world will praise and submit itself to the mind of the king who is able to give with affability, and to protect all who come to him.

“முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.”
— திருக்குறள் 388 · இறைமாட்சி

That king, will be esteemed a God among men, who performs his own duties, and protects (his subjects).

“செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.”
— திருக்குறள் 389 · இறைமாட்சி

The whole world will dwell under the umbrella of the king, who can bear words that embitter the ear.

“கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி.”
— திருக்குறள் 390 · இறைமாட்சி

He is the light of kings who has there four things, beneficence, benevolence, rectitude, and care for his people.