“வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.”
By the continuance of rain the world is preserved in existence; it is therefore worthy to be called ambrosia.
வான்சிறப்பு
“வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.”
By the continuance of rain the world is preserved in existence; it is therefore worthy to be called ambrosia.
“துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.”
Rain produces good food, and is itself food.
“விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.”
If the cloud, withholding rain, deceive (our hopes) hunger will long distress the sea-girt spacious world.
“ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.”
If the abundance of wealth imparting rain diminish, the labour of the plough must cease.
“கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.”
Rain by its absence ruins men; and by its existence restores them to fortune.
“விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.”
If no drop falls from the clouds, not even the green blade of grass will be seen.
“நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.”
Even the wealth of the wide sea will be diminished, if the cloud that has drawn (its waters) up gives them not back again (in rain).
“சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.”
If the heaven dry up, neither yearly festivals, nor daily worship will be offered in this world, to the celestials.
“தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.”
If rain fall not, penance and alms-deeds will not dwell within this spacious world.
“நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.”
If it be said that the duties of life cannot be discharged by any person without water, so without rain there cannot be the flowing of water.