Skip to content
Thamizh Koodam — A global home for Tamil culture and community

3. The Greatness of Ascetics

நீத்தார் பெருமை

Virtue (அறத்துப்பால்) · Prologue (பாயிரவியல்) · kurals 21–30
Kural number
Show beside each kural
“ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.”
— திருக்குறள் 21 · நீத்தார் பெருமை

The end and aim of all treatise is to extol beyond all other excellence, the greatness of those who, while abiding in the rule of conduct peculiar to their state, have abandoned all desire.

“துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.”
— திருக்குறள் 22 · நீத்தார் பெருமை

To describe the measure of the greatness of those who have forsaken the two-fold desires, is like counting the dead.

“இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.”
— திருக்குறள் 23 · நீத்தார் பெருமை

The greatness of those who have discovered the properties of both states of being, and renounced the world, shines forth on earth (beyond all others).

“உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது.”
— திருக்குறள் 24 · நீத்தார் பெருமை

He who guides his five senses by the hook of wisdom will be a seed in the world of heaven.

“ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.”
— திருக்குறள் 25 · நீத்தார் பெருமை

Indra, the king of the inhabitants of the spacious heaven, is himself, a sufficient proof of the strength of him who has subdued his five senses.

“செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.”
— திருக்குறள் 26 · நீத்தார் பெருமை

The great will do those things which is difficult to be done; but the mean cannot do them.

“சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.”
— திருக்குறள் 27 · நீத்தார் பெருமை

The world is within the knowledge of him who knows the properties of taste, sight, touch, hearing and smell.

“நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.”
— திருக்குறள் 28 · நீத்தார் பெருமை

The hidden words of the men whose words are full of effect, will shew their greatness to the world.

“குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.”
— திருக்குறள் 29 · நீத்தார் பெருமை

The anger of those who have ascended the mountain of goodness, though it continue but for a moment, cannot be resisted.

“அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.”
— திருக்குறள் 30 · நீத்தார் பெருமை

The virtuous are truly called Anthanar; because in their conduct towards all creatures they are clothed in kindness.