Skip to content
Thamizh Koodam — A global home for Tamil culture and community

16. The Possession of Patience, Forbearance

பொறையுடைமை

Virtue (அறத்துப்பால்) · Domestic Virtue (இல்லறவியல்) · kurals 151–160
Kural number
Show beside each kural
“அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.”
— திருக்குறள் 151 · பொறையுடைமை

To bear with those who revile us, just as the earth bears up those who dig it, is the first of virtues.

“பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.”
— திருக்குறள் 152 · பொறையுடைமை

Bear with reproach even when you can retaliate; but to forget it will be still better than that.

“இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.”
— திருக்குறள் 153 · பொறையுடைமை

To neglect hospitality is poverty of poverty. To bear with the ignorant is might of might.

“நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை
போற்றி யொழுகப் படும்.”
— திருக்குறள் 154 · பொறையுடைமை

If you desire that greatness should never leave, you preserve in your conduct the exercise of patience.

“ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.”
— திருக்குறள் 155 · பொறையுடைமை

(The wise) will not at all esteem the resentful. They will esteem the patient just as the gold which they lay up with care.

“ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.”
— திருக்குறள் 156 · பொறையுடைமை

The pleasure of the resentful continues for a day. The praise of the patient will continue until (the final destruction of) the world.

“திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.”
— திருக்குறள் 157 · பொறையுடைமை

Though others inflict injuries on you, yet compassionating the evil (that will come upon them) it will be well not to do them anything contrary to virtue.

“மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.”
— திருக்குறள் 158 · பொறையுடைமை

Let a man by patience overcome those who through pride commit excesses.

“துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.”
— திருக்குறள் 159 · பொறையுடைமை

Those who bear with the uncourteous speech of the insolent are as pure as the ascetics.

“உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.”
— திருக்குறள் 160 · பொறையுடைமை

Those who endure abstinence from food are great, next to those who endure the uncourteous speech of others.