Skip to content
Thamizh Koodam — A global home for Tamil culture and community

15. Not coveting another's Wife

பிறனில் விழையாமை

Virtue (அறத்துப்பால்) · Domestic Virtue (இல்லறவியல்) · kurals 141–150
Kural number
Show beside each kural
“பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்.”
— திருக்குறள் 141 · பிறனில் விழையாமை

The folly of desiring her who is the property of another will not be found in those who know (the attributes of) virtue and (the rights of) property.

“அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.”
— திருக்குறள் 142 · பிறனில் விழையாமை

Among all those who stand on the outside of virtue, there are no greater fools than those who stand outside their neighbour's door.

“விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்துதொழுகு வார்.”
— திருக்குறள் 143 · பிறனில் விழையாமை

Certainly they are no better than dead men who desire evil towards the wife of those who undoubtingly confide in them.

“எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்.”
— திருக்குறள் 144 · பிறனில் விழையாமை

However great one may be, what does it avail if, without at all considering his guilt, he goes unto the wife of another ?

“எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.”
— திருக்குறள் 145 · பிறனில் விழையாமை

He who thinks lightly of going into the wife of another acquires guilt that will abide with him imperishably and for ever.

“பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.”
— திருக்குறள் 146 · பிறனில் விழையாமை

Hatred, sin, fear, disgrace; these four will never leave him who goes in to his neighbour's wife.

“அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.”
— திருக்குறள் 147 · பிறனில் விழையாமை

He who desires not the womanhood of her who should walk according to the will of another will be praised as a virtuous house-holder.

“பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.”
— திருக்குறள் 148 · பிறனில் விழையாமை

That noble manliness which looks not at the wife of another is the virtue and dignity of the great.

“நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.”
— திருக்குறள் 149 · பிறனில் விழையாமை

Is it asked, "who are those who shall obtain good in this world surrounded by the terror-producing sea ?" Those who touch not the shoulder of her who belongs to another.

“அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.”
— திருக்குறள் 150 · பிறனில் விழையாமை

Though a man perform no virtuous deeds and commit (every) vice, it will be well if he desire not the womanhood of her who is within the limit (of the house) of another.