Skip to content
Thamizh Koodam — A global home for Tamil culture and community

17. Not Envying

அழுக்காறாமை

Virtue (அறத்துப்பால்) · Domestic Virtue (இல்லறவியல்) · kurals 161–170
Kural number
Show beside each kural
“ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.”
— திருக்குறள் 161 · அழுக்காறாமை

Let a man esteem that disposition which is free from envy in the same manner as propriety of conduct.

“விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.”
— திருக்குறள் 162 · அழுக்காறாமை

Amongst all attainable excellences there is none equal to that of being free from envy towords others.

“அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.”
— திருக்குறள் 163 · அழுக்காறாமை

Of him who instead of rejoicing in the wealth of others, envies it, it will be said "he neither desires virtue not wealth."

“அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.”
— திருக்குறள் 164 · அழுக்காறாமை

(The wise) knowing the misery that comes from transgression will not through envy commit unrighteous deeds.

“அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்காயும் கேடீன் பது.”
— திருக்குறள் 165 · அழுக்காறாமை

To those who cherish envy that is enough. Though free from enemies that (envy) will bring destruction.

“கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.”
— திருக்குறள் 166 · அழுக்காறாமை

He who is envious at a gift (made to another) will with his relations utterly perish destitute of food and rainment.

“அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.”
— திருக்குறள் 167 · அழுக்காறாமை

Lakshmi envying (the prosperity) of the envious man will depart and introduce him to her sister.

“அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.”
— திருக்குறள் 168 · அழுக்காறாமை

Envy will destroy (a man's) wealth (in his world) and drive him into the pit of fire (in the world to come.)

“அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.”
— திருக்குறள் 169 · அழுக்காறாமை

The wealth of a man of envious mind and the poverty of the righteous will be pondered.

“அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.”
— திருக்குறள் 170 · அழுக்காறாமை

Never have the envious become great; never have those who are free from envy been without greatness.