“அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது.”
O my soul! although you have seen how his soul stands by him, how is it you do not stand by me?
நெஞ்சொடுபுலத்தல்
“அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது.”
O my soul! although you have seen how his soul stands by him, how is it you do not stand by me?
“உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.”
O my soul! although you have known him who does not love me, still do you go to him, saying "he will not be displeased."
“கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல்.”
O my soul! do you follow him at pleasure under the belief that the ruined have no friends?
“இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று.”
O my soul! you would not first seem sulky and then enjoy (him); who then would in future consult you about such things?
“பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.”
My soul fears when it is without him; it also fears when it is with him; it is subject to incessant sorrow.
“தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு.”
My mind has been (here) in order to eat me up (as it were) whenever I think of him in my solitude.
“நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சிற் பட்டு.”
I have even forgotten my modesty, having been caught in my foolish mind which is not dignified enough to forget him.
“எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.”
My soul which clings to life thinks only of his (own) gain in the belief that it would be disgraceful for it to despise him.
“துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி.”
Who would help me out of one's distress, when one's own soul refuses help to one?
“தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி.”
It is hardly possible for strangers to behave like relations, when one's own soul acts like a stranger.