Skip to content
Thamizh Koodam — A global home for Tamil culture and community

122. The Visions of the Night

கனவுநிலையுரைத்தல்

Love (காமத்துப்பால்) · The Post-marital love (கற்பியல்) · kurals 1211–1220
Kural number
Show beside each kural
“காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து.”
— திருக்குறள் 1211 · கனவுநிலையுரைத்தல்

Where with shall I feast the dream which has brought me my dear one's messenger ?

“கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன்.”
— திருக்குறள் 1212 · கனவுநிலையுரைத்தல்

If my fish-like painted eyes should, at my begging, close in sleep, I could fully relate my sufferings to my lord.

“நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.”
— திருக்குறள் 1213 · கனவுநிலையுரைத்தல்

My life lasts because in my dream I behold him who does not favour me in my waking hours.

“கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு.”
— திருக்குறள் 1214 · கனவுநிலையுரைத்தல்

There is pleasure in my dream, because in it I seek and obtain him who does not visit me in my wakefulness.

“நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது.”
— திருக்குறள் 1215 · கனவுநிலையுரைத்தல்

I saw him in my waking hours, and then it was pleasant; I see him just now in my dream, and it is (equally) pleasant.

“நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்.”
— திருக்குறள் 1216 · கனவுநிலையுரைத்தல்

Were there no such thing as wakefulness, my beloved (who visited me) in my dream would not depart from me.

“நனவினால் நல்காக் கொடியார் கனவனால்
என்எம்மைப் பீழிப் பது.”
— திருக்குறள் 1217 · கனவுநிலையுரைத்தல்

The cruel one who would not favour me in my wakefulness, what right has he to torture me in my dreams?

“துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.”
— திருக்குறள் 1218 · கனவுநிலையுரைத்தல்

When I am asleep he rests on my shoulders, (but) when I awake he hastens into my soul.

“நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர்.”
— திருக்குறள் 1219 · கனவுநிலையுரைத்தல்

They who have no dear ones to behold in their dreams blame him who visits me not in my waking hours.

“நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர்.”
— திருக்குறள் 1220 · கனவுநிலையுரைத்தல்

The women of this place say he has forsaken me in my wakefulness. I think they have not seen him visit me in my dreams.