Skip to content
Thamizh Koodam — A global home for Tamil culture and community

117. Complainings

படர்மெலிந்திரங்கல்

Love (காமத்துப்பால்) · The Post-marital love (கற்பியல்) · kurals 1161–1170
Kural number
Show beside each kural
“மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்.”
— திருக்குறள் 1161 · படர்மெலிந்திரங்கல்

I would hide this pain from others; but it (only) swells like a spring to those who drain it.

“கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும்.”
— திருக்குறள் 1162 · படர்மெலிந்திரங்கல்

I cannot conceal this pain, nor can I relate it without shame to him who has caused it.

“காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து.”
— திருக்குறள் 1163 · படர்மெலிந்திரங்கல்

(Both) lust and shame, with my soul for their shoulder pole balance themselves on a body that cannot bear them.

“காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்.”
— திருக்குறள் 1164 · படர்மெலிந்திரங்கல்

There is indeed a flood of lust; but there is no raft of safety to cross it with.

“துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்.”
— திருக்குறள் 1165 · படர்மெலிந்திரங்கல்

He who can produce sorrow from friendship, what can he not bring forth out of enmity ?

“இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது.”
— திருக்குறள் 1166 · படர்மெலிந்திரங்கல்

The pleasure of lust is (as great as) the sea; but the pain of lust is far greater.

“காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்.”
— திருக்குறள் 1167 · படர்மெலிந்திரங்கல்

I have swam across the terrible flood of lust, but have not seen its shore; even at midnight I am alone; still I live.

“மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை.”
— திருக்குறள் 1168 · படர்மெலிந்திரங்கல்

The night which graciously lulls to sleep all living creatures, has me alone for her companion.

“கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்
நெடிய கழியும் இரா.”
— திருக்குறள் 1169 · படர்மெலிந்திரங்கல்

The long nights of these days are far more cruel than the heartless one who is torturing me.

“உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண்.”
— திருக்குறள் 1170 · படர்மெலிந்திரங்கல்

Could mine eyes travel like my thoughts to the abode (of my absent lord), they would not swim in this flood of tears.