Skip to content
Thamizh Koodam — A global home for Tamil culture and community

116. Separation unendurable

பிரிவாற்றாமை

Love (காமத்துப்பால்) · The Post-marital love (கற்பியல்) · kurals 1151–1160
Kural number
Show beside each kural
“செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.”
— திருக்குறள் 1151 · பிரிவாற்றாமை

If it is not departure, tell me; but if it is your speedy return, tell it to those who would be alive then.

“இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு.”
— திருக்குறள் 1152 · பிரிவாற்றாமை

His very look was once pleasing; but (now) even intercourse is painful through fear of separation.

“அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்.”
— திருக்குறள் 1153 · பிரிவாற்றாமை

As even the lover who understands (everything) may at times depart, confidence is hardly possible.

“அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு.”
— திருக்குறள் 1154 · பிரிவாற்றாமை

If he who bestowed his love and said "fear not" should depart, will it be the fault of those who believed in (his) assuring words ?

“ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு.”
— திருக்குறள் 1155 · பிரிவாற்றாமை

If you would save (my life), delay the departure of my destined (husband); for if he departs, intercourse will become impossible.

“பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை.”
— திருக்குறள் 1156 · பிரிவாற்றாமை

If he is so cruel as to mention his departure (to me), the hope that he would bestow (his love) must be given up.

“துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை.”
— திருக்குறள் 1157 · பிரிவாற்றாமை

Do not the rings that begin to slide down my fingers forebode the separation of my lord ?

“இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு.”
— திருக்குறள் 1158 · பிரிவாற்றாமை

Painful is it to live in a friendless town; but far more painful is it to part from one's lover.

“தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ.”
— திருக்குறள் 1159 · பிரிவாற்றாமை

Fire burns when touched; but, like the sickness of love, can it also burn when removed ?

“அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர்.”
— திருக்குறள் 1160 · பிரிவாற்றாமை

As if there were many indeed that can consent to the impossible, kill their pain, endure separation and yet continue to live afterwards.