Skip to content
Thamizh Koodam — A global home for Tamil culture and community

107. The Dread of Mendicancy

இரவச்சம்

Wealth (பொருட்பால்) · Civil (குடியியல்) · kurals 1061–1070
Kural number
Show beside each kural
“கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும்.”
— திருக்குறள் 1061 · இரவச்சம்

Not to beg (at all) even from those excellent persons who cheerfully give without refusing, will do immense good.

“இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.”
— திருக்குறள் 1062 · இரவச்சம்

If the Creator of the world has decreed even begging as a means of livelihood, may he too go abegging and perish.

“இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்ட தில்.”
— திருக்குறள் 1063 · இரவச்சம்

There is no greater folly than the boldness with which one seeks to remedy the evils of poverty by begging (rather than by working).

“இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
காலும் இரவொல்லாச் சால்பு.”
— திருக்குறள் 1064 · இரவச்சம்

Even the whole world cannot sufficiently praise the dignity that would not beg even in the midst of destitution.

“தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினிய தில்.”
— திருக்குறள் 1065 · இரவச்சம்

Even thin gruel is ambrosia to him who has obtained it by labour.

“ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்த தில்.”
— திருக்குறள் 1066 · இரவச்சம்

There is nothing more disgraceful to one's tongue than to use it in begging water even for a cow.

“இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று.”
— திருக்குறள் 1067 · இரவச்சம்

I beseech all beggars and say, "If you need to beg, never beg of those who give unwillingly."

“இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும்.”
— திருக்குறள் 1068 · இரவச்சம்

The unsafe raft of begging will split when it strikes on the rock of refusal.

“இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும்.”
— திருக்குறள் 1069 · இரவச்சம்

To think of (the evil of) begging is enough to melt one's heart; but to think of refusal is enough to break it.

“கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்.”
— திருக்குறள் 1070 · இரவச்சம்

Saying 'No' to a beggar takes away his life. (but as that very word will kill the refuser) where then would the latter's life hide itself ?