Skip to content
Thamizh Koodam — A global home for Tamil culture and community

108. Baseness

கயமை

Wealth (பொருட்பால்) · Civil (குடியியல்) · kurals 1071–1080
Kural number
Show beside each kural
“மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்.”
— திருக்குறள் 1071 · கயமை

The base resemble men perfectly (as regards form); and we have not seen such (exact) resemblance (among any other species).

“நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத்து அவலம் இலர்.”
— திருக்குறள் 1072 · கயமை

The low enjoy more felicity than those who know what is good; for the former are not troubled with anxiety (as to the good).

“தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்.”
— திருக்குறள் 1073 · கயமை

The base resemble the Gods; for the base act as they like.

“அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.”
— திருக்குறள் 1074 · கயமை

The base feels proud when he sees persons whose acts meaner than his own.

“அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது.”
— திருக்குறள் 1075 · கயமை

(The principle of) behaviour in the mean is chiefly fear; if not, hope of gain, to some extent.

“அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்.”
— திருக்குறள் 1076 · கயமை

The base are like a drum that is beaten, for they unburden to others the secrets they have heard.

“ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு.”
— திருக்குறள் 1077 · கயமை

The mean will not (even) shake off (what sticks to) their hands (soon after a meal) to any but those who would break their jaws with their clenched fists.

“சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்.”
— திருக்குறள் 1078 · கயமை

The great bestow (their alms) as soon as they are informed; (but) the mean, like the sugar-cane, only when they are tortured to death.

“உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்.”
— திருக்குறள் 1079 · கயமை

The base will bring an evil (accusation) against others, as soon as he sees them (enjoying) good food and clothing.

“எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து.”
— திருக்குறள் 1080 · கயமை

The base will hasten to sell themselves as soon as a calamity has befallen them. For what else are they fitted ?