Skip to content
Thamizh Koodam — A global home for Tamil culture and community

109. The Pre-marital love

தகையணங்குறுத்தல்

Love (காமத்துப்பால்) · The Pre-marital love (களவியல்) · kurals 1081–1090
Kural number
Show beside each kural
“அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.”
— திருக்குறள் 1081 · தகையணங்குறுத்தல்

Is this jewelled female a celestial, a choice peahen, or a human being ? My mind is perplexed.

“நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.”
— திருக்குறள் 1082 · தகையணங்குறுத்தல்

This female beauty returning my looks is like a celestial maiden coming with an army to contend against me.

“பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.”
— திருக்குறள் 1083 · தகையணங்குறுத்தல்

I never knew before what is called Yama; I see it now; it is the eyes that carry on a great fight with (the help of) female qualities.

“கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.”
— திருக்குறள் 1084 · தகையணங்குறுத்தல்

These eyes that seem to kill those who look at them are as it were in hostilities with this feminine simplicity.

“கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து.”
— திருக்குறள் 1085 · தகையணங்குறுத்தல்

Is it Yama, (a pair of) eyes or a hind ?- Are not all these three in the looks of this maid ?

“கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்.”
— திருக்குறள் 1086 · தகையணங்குறுத்தல்

Her eyes will cause (me) no trembling sorrow, if they are properly hidden by her cruel arched eye-brows.

“கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.”
— திருக்குறள் 1087 · தகையணங்குறுத்தல்

The cloth that covers the firm bosom of this maiden is (like) that which covers the eyes of a rutting elephant.

“ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு.”
— திருக்குறள் 1088 · தகையணங்குறுத்தல்

On her bright brow alone is destroyed even that power of mine that used to terrify the most fearless foes in the battlefield.

“பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணியெவனோ ஏதில தந்து.”
— திருக்குறள் 1089 · தகையணங்குறுத்தல்

Of what use are other jewels to her who is adorned with modesty, and the meek looks of a hind ?

“உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.”
— திருக்குறள் 1090 · தகையணங்குறுத்தல்

Unlike boiled honey which yields delight only when it is drunk, love gives pleasure even when looked at.