Skip to content
Thamizh Koodam — A global home for Tamil culture and community

106. Mendicancy

இரவு

Wealth (பொருட்பால்) · Civil (குடியியல்) · kurals 1051–1060
Kural number
Show beside each kural
“இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று.”
— திருக்குறள் 1051 · இரவு

If you meet with those that may be begged of, you may beg; (but) if they withhold (their gift) it is their blame and not yours.

“இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்.”
— திருக்குறள் 1052 · இரவு

Even begging may be pleasant, if what is begged for is obtained without grief (to him that begs).

“கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று
இரப்புமோ ரேஎர் உடைத்து.”
— திருக்குறள் 1053 · இரவு

There is even a beauty in standing before and begging of those who are liberal in their gifts and understand their duty (to beggars).

“இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு.”
— திருக்குறள் 1054 · இரவு

To beg of such as never think of withholding (their charity) even in their dreams, is in fact the same as giving (it oneself);

“கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று
இரப்பவர் மேற்கொள் வது.”
— திருக்குறள் 1055 · இரவு

As there are in the world those that give without refusing, there are (also) those that prefer to beg by simply standing before them.

“கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும்.”
— திருக்குறள் 1056 · இரவு

All the evil of begging will be removed at the sight of those who are far from the evil of refusing.

“இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து.”
— திருக்குறள் 1057 · இரவு

Beggars rejoice exceedingly when they behold those who bestow (their alms) with kindness and courtesy.

“இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று.”
— திருக்குறள் 1058 · இரவு

If there were no beggars, (the actions done in) the cool wide world would only resemble the movement of a puppet.

“ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை.”
— திருக்குறள் 1059 · இரவு

What (praise) would there be to givers (of alms) if there were no beggars to ask for and reveive (them).

“இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி.”
— திருக்குறள் 1060 · இரவு

He who begs ought not to be angry (at a refusal); for even the misery of (his own) poverty should be a sufficient reason (for so doing).