Skip to content
Thamizh Koodam — A global home for Tamil culture and community

105. Poverty

நல்குரவு

Wealth (பொருட்பால்) · Civil (குடியியல்) · kurals 1041–1050
Kural number
Show beside each kural
“இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.”
— திருக்குறள் 1041 · நல்குரவு

There is nothing that afflicts (one) like poverty.

“இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.”
— திருக்குறள் 1042 · நல்குரவு

When cruel poverty comes on, it deprives one of both the present and future (bliss).

“தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை.”
— திருக்குறள் 1043 · நல்குரவு

Hankering poverty destroys at once the greatness of (one's) ancient descent and (the dignity of one's) speech.

“இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்.”
— திருக்குறள் 1044 · நல்குரவு

Even in those of high birth, poverty will produce the fault of uttering mean words.

“நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்.”
— திருக்குறள் 1045 · நல்குரவு

The misery of poverty brings in its train many (more) miseries.

“நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்.”
— திருக்குறள் 1046 · நல்குரவு

The words of the poor are profitless, though they may be sound in thought and clear in expression.

“அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்.”
— திருக்குறள் 1047 · நல்குரவு

He that is reduced to absolute poverty will be regarded as a stranger even by his own mother.

“இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு.”
— திருக்குறள் 1048 · நல்குரவு

Is the poverty that almost killed me yesterday, to meet me today too ?

“நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது.”
— திருக்குறள் 1049 · நல்குரவு

One may sleep in the midst of fire; but by no means in the midst of poverty.

“துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று.”
— திருக்குறள் 1050 · நல்குரவு

The destitute poor, who do not renounce their bodies, only consume their neighbour's salt and water.