Skip to content
Thamizh Koodam — A global home for Tamil culture and community

98. Greatness

பெருமை

Wealth (பொருட்பால்) · Civil (குடியியல்) · kurals 971–980
Kural number
Show beside each kural
“ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதிறந்து வாழ்தும் எனல்.”
— திருக்குறள் 971 · பெருமை

One's light is the abundance of one's courage; one's darkness is the desire to live destitute of such (a state of mind.)

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.”
— திருக்குறள் 972 · பெருமை

All human beings agree as regards their birth but differ as regards their characteristics, because of the different qualities of their actions.

“மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.”
— திருக்குறள் 973 · பெருமை

Though (raised) above, the base cannot become great; though (brought) low, the great cannot become base.

“ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.”
— திருக்குறள் 974 · பெருமை

Even greatness, like a woman's chastity, belongs only to him who guards himself.

“பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்.”
— திருக்குறள் 975 · பெருமை

(Though reduced) the great will be able to perform, in the proper way, deeds difficult (for others to do).

“சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக்கொள் வேமென்னும் நோக்கு”
— திருக்குறள் 976 · பெருமை

It is never in the nature of the base to seek the society of the great and partake of their nature.

“இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல் லவர்கண் படின்.”
— திருக்குறள் 977 · பெருமை

Even nobility of birth, wealth and learning, if in (the possession of) the base, will (only) produce everincreasing pride.

“பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.”
— திருக்குறள் 978 · பெருமை

The great will always humble himself; but the mean will exalt himself in self-admiration.

“பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்.”
— திருக்குறள் 979 · பெருமை

Freedom from conceit is (the nature of true) greatness; (while) obstinacy therein is (that of) meanness.

“அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.”
— திருக்குறள் 980 · பெருமை

The great hide the faults of others; the base only divulge them.