“வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.”
Though able to win, let not one desire gambling; (for) even what is won is like a fish swallowing the iron in fish-hook.
சூது
“வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.”
Though able to win, let not one desire gambling; (for) even what is won is like a fish swallowing the iron in fish-hook.
“ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.”
Is there indeed a means of livelihood that can bestow happiness on gamblers who gain one and lose a hundred ?
“உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்.”
If the king is incessantly addicted to the rolling dice in the hope of gain, his wealth and the resources thereof will take their departure and fall into other's hands.
“சிறுமை பலசெய்து சீரழக்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல்.”
There is nothing else that brings (us) poverty like gambling which causes many a misery and destroys (one's) reputation.
“கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.”
Penniless are those who by reason of their attachment would never forsake gambling, the gambling-place and the handling (of dice).
“அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
முகடியான் மூடப்பட் டார்.”
Those who are swallowed by the goddess called "gambling" will never have their hunger satisfied, but suffer the pangs of hell in the next world.
“பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்.”
To waste time at the place of gambling will destroy inherited wealth and goodness of character.
“பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது.”
Gambling destroys property, teaches falsehood, puts an end to benevolence, and brings in misery (here and hereafter).
“உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
அடையாவாம் ஆயங் கொளின்.”
The habit of gambling prevents the attainment of these five: clothing, wealth, food, fame and learning.
“இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற்று உயிர்.”
As the gambler loves (his vice) the more he loses by it, so does the soul love (the body) the more it suffers through it.