Skip to content
Thamizh Koodam — A global home for Tamil culture and community

90. Not Offending the Great

பெரியாரைப் பிழையாமை

Wealth (பொருட்பால்) · Friendship (நட்பியல்) · kurals 891–900
Kural number
Show beside each kural
“ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை.”
— திருக்குறள் 891 · பெரியாரைப் பிழையாமை

Not to disregard the power of those who can carry out (their wishes) is more important than all the watchfulness of those who guard (themselves against evil).

“பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும்.”
— திருக்குறள் 892 · பெரியாரைப் பிழையாமை

To behave without respect for the great (rulers) will make them do (us) irremediable evils.

“கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு.”
— திருக்குறள் 893 · பெரியாரைப் பிழையாமை

If a person desires ruin, let him not listen to the righteous dictates of law, but commit crimes against those who are able to slay (other sovereigns).

“கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்.”
— திருக்குறள் 894 · பெரியாரைப் பிழையாமை

The weak doing evil to the strong is like beckoning Yama to come (and destroy them).

“யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்.”
— திருக்குறள் 895 · பெரியாரைப் பிழையாமை

Those who have incurred the wrath of a cruel and mighty potentate will not prosper wherever they may go.

“எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.”
— திருக்குறள் 896 · பெரியாரைப் பிழையாமை

Though burnt by a fire (from a forest), one may perhaps live; (but) never will he live who has shown disrespect to the great (devotees).

“வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்.”
— திருக்குறள் 897 · பெரியாரைப் பிழையாமை

If a king incurs the wrath of the righteous great, what will become of his government with its splendid auxiliaries and (all) its untold wealth ?

“குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து.”
— திருக்குறள் 898 · பெரியாரைப் பிழையாமை

If (the) hill-like (devotees) resolve on destruction, those who seemed to be everlasting will be destroyed root and branch from the earth.

“ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்.”
— திருக்குறள் 899 · பெரியாரைப் பிழையாமை

If those of exalted vows burst in a rage, even (Indra) the king will suffer a sudden loss and be entirely ruined.

“இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்.”
— திருக்குறள் 900 · பெரியாரைப் பிழையாமை

Though in possession of numerous auxiliaries, they will perish who are-exposed to the wrath of the noble whose penance is boundless.