Skip to content
Thamizh Koodam — A global home for Tamil culture and community

80. Investigation in forming Friendships

நட்பாராய்தல்

Wealth (பொருட்பால்) · Friendship (நட்பியல்) · kurals 791–800
Kural number
Show beside each kural
“நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு.”
— திருக்குறள் 791 · நட்பாராய்தல்

As those who are of a friendly nature will not forsake (a friend) after once loving (him), there is no evil so great as contracting a friendship without due inquiry.

“ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்.”
— திருக்குறள் 792 · நட்பாராய்தல்

The friendship contracted by him who has not made repeated inquiry will in the end grieve (him) to death.

“குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு.”
— திருக்குறள் 793 · நட்பாராய்தல்

Make friendship (with one) after ascertaining (his) character, birth, defects and the whole of one's relations.

“குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.”
— திருக்குறள் 794 · நட்பாராய்தல்

The friendship of one who belongs to a (good) family and is afraid of (being charged with) guilt, is worth even purchasing.

“அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நடபு ஆய்ந்து கொளல்.”
— திருக்குறள் 795 · நட்பாராய்தல்

You should examine and secure the friendship of those who can speak so as to make you weep over a crime (before its commission) or rebuke you severely (after you have done it) and are able to teach you (the ways of) the world.

“கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.”
— திருக்குறள் 796 · நட்பாராய்தல்

Even in ruin there is some good; (for) it is a rod by which one may measure fully (the affection of one's) relations.

“ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்.”
— திருக்குறள் 797 · நட்பாராய்தல்

It is indead a gain for one to renounce the friendship of fools.

“உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.”
— திருக்குறள் 798 · நட்பாராய்தல்

Do not think of things that discourage your mind, nor contract friendship with those who would forsake you in adversity.

“கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளஞ் சுடும்.”
— திருக்குறள் 799 · நட்பாராய்தல்

The very thought of the friendship of those who have deserted one at the approach of adversity will burn one's mind at the time of death.

“மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு.”
— திருக்குறள் 800 · நட்பாராய்தல்

Continue to enjoy the friendship of the pure; (but) renounce even with a gift, the friendship of those who do not agree (with the world).