Skip to content
Thamizh Koodam — A global home for Tamil culture and community

55. The Right Sceptre

செங்கோன்மை

Wealth (பொருட்பால்) · Royalty (அரசியல்) · kurals 541–550
Kural number
Show beside each kural
“ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.”
— திருக்குறள் 541 · செங்கோன்மை

To examine into (the crimes which may be committed), to show no favour (to any one), to desire to act with impartiality towards all, and to inflict (such punishments) as may be wisely resolved on, constitute rectitude.

“வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி.”
— திருக்குறள் 542 · செங்கோன்மை

When there is rain, the living creation thrives; and so when the king rules justly, his subjects thrive.

“அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.”
— திருக்குறள் 543 · செங்கோன்மை

The sceptre of the king is the firm support of the Vedas of the Brahmin, and of all virtues therein described.

“குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.”
— திருக்குறள் 544 · செங்கோன்மை

The world will constantly embrace the feet of the great king who rules over his subjects with love.

“இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு.”
— திருக்குறள் 545 · செங்கோன்மை

Rain and plentiful crops will ever dwell together in the country of the king who sways his sceptre with justice.

“வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.”
— திருக்குறள் 546 · செங்கோன்மை

It is not the javelin that gives victory, but the king's sceptre, if it do no injustice.

“இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.”
— திருக்குறள் 547 · செங்கோன்மை

The king defends the whole world; and justice, when administered without defect, defends the king.

“எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.”
— திருக்குறள் 548 · செங்கோன்மை

The king who gives not facile audience (to those who approach him), and who does not examine and pass judgment (on their complaints), will perish in disgrace.

“குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.”
— திருக்குறள் 549 · செங்கோன்மை

In guarding his subjects (against injury from others), and in preserving them himself; to punish crime is not a fault in a king, but a duty.

“கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.”
— திருக்குறள் 550 · செங்கோன்மை

For a king to punish criminals with death, is like pulling up the weeds in the green corn.