Skip to content
Thamizh Koodam — A global home for Tamil culture and community

54. Unforgetfulness

பொச்சாவாமை

Wealth (பொருட்பால்) · Royalty (அரசியல்) · kurals 531–540
Kural number
Show beside each kural
“இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.”
— திருக்குறள் 531 · பொச்சாவாமை

More evil than excessive anger, is forgetfulness which springs from the intoxication of great joy.

“பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.”
— திருக்குறள் 532 · பொச்சாவாமை

Forgetfulness will destroy fame, even as constant poverty destroys knowledge.

“பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு.”
— திருக்குறள் 533 · பொச்சாவாமை

Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

“அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு.”
— திருக்குறள் 534 · பொச்சாவாமை

Just as the coward has no defence (by whatever fortifications ha may be surrounded), so the thoughtless has no good (whatever advantages he may possess).

“முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்னூறு இரங்கி விடும்.”
— திருக்குறள் 535 · பொச்சாவாமை

The thoughtless man, who provides not against the calamities that may happen, will afterwards repent for his fault.

“இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்பது இல்.”
— திருக்குறள் 536 · பொச்சாவாமை

There is nothing comparable with the possession of unfailing thoughtfulness at all times; and towards all persons.

“அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின்.”
— திருக்குறள் 537 · பொச்சாவாமை

There is nothing too difficult to be accomplished, if a man set about it carefully, with unflinching endeavour.

“புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.”
— திருக்குறள் 538 · பொச்சாவாமை

Let (a man) observe and do these things which have been praised (by the wise); if he neglects and fails to perform them, for him there will be no (happiness) throughout the seven births.

“இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.”
— திருக்குறள் 539 · பொச்சாவாமை

Let (a king) think of those who have been ruined by neglect, when his mind is elated with joy.

“உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்.”
— திருக்குறள் 540 · பொச்சாவாமை

It is easy for (one) to obtain whatever he may think of, if he can again think of it.