Skip to content
Thamizh Koodam — A global home for Tamil culture and community

52. Selection and Employment

தெரிந்துவினையாடல்

Wealth (பொருட்பால்) · Royalty (அரசியல்) · kurals 511–520
Kural number
Show beside each kural
“நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்.”
— திருக்குறள் 511 · தெரிந்துவினையாடல்

He should be employed (by a king), whose nature leads him to choose the good, after having weighed both the evil and the good in any undertaking.

“வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை.”
— திருக்குறள் 512 · தெரிந்துவினையாடல்

Let him do (the king's) work who can enlarge the sources (of revenue), increase wealth and considerately prevent the accidents (which would destroy it).

“அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.”
— திருக்குறள் 513 · தெரிந்துவினையாடல்

Let the choice (of a king) fall upon him who largely possesses these four things, love, knowledge, a clear mind and freedom from covetousness.

“எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்.”
— திருக்குறள் 514 · தெரிந்துவினையாடல்

Even when (a king) has tried them in every possible way, there are many men who change, from the nature of the works (in which they may be employed).

“அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று.”
— திருக்குறள் 515 · தெரிந்துவினையாடல்

(A king's) work can only be accomplished by a man of wisdom and patient endurance; it is not of a nature to be given to one from mere personal attachment.

“செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்.”
— திருக்குறள் 516 · தெரிந்துவினையாடல்

Let (a king) act, after having considered the agent (whom he is to employ), the deed (he desires to do), and the time which is suitable to it.

“இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.”
— திருக்குறள் 517 · தெரிந்துவினையாடல்

After having considered, "this man can accomplish this, by these means", let (the king) leave with him the discharge of that duty.

“வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்.”
— திருக்குறள் 518 · தெரிந்துவினையாடல்

Having considered what work a man is fit for, let (the king) employ him in that work.

“வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்கும் திரு.”
— திருக்குறள் 519 · தெரிந்துவினையாடல்

Prosperity will leave (the king) who doubts the friendship of the man who steadily labours in the discharge of his duties.

“நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு”
— திருக்குறள் 520 · தெரிந்துவினையாடல்

Let a king daily examine the conduct of his servants; if they do not act crookedly, the world will not act crookedly.