Skip to content
Thamizh Koodam — A global home for Tamil culture and community

51. Selection and Confidence

தெரிந்துதெளிதல்

Wealth (பொருட்பால்) · Royalty (அரசியல்) · kurals 501–510
Kural number
Show beside each kural
“அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்.”
— திருக்குறள் 501 · தெரிந்துதெளிதல்

Let (a minister) be chosen, after he has been tried by means of these four things, viz,-his virtue, (love of) money, (love of) sexual pleasure, and tear of (losing) life.

“குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் சுட்டே தெளிவு.”
— திருக்குறள் 502 · தெரிந்துதெளிதல்

(The king's) choice should (fall) on him, who is of good family, who is free from faults, and who has the modesty which fears the wounds (of sin).

“அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.”
— திருக்குறள் 503 · தெரிந்துதெளிதல்

When even men, who have studied the most difficult works, and who are free from faults, are (carefully) examined, it is a rare thing to find them without ignorance.

“குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.”
— திருக்குறள் 504 · தெரிந்துதெளிதல்

Let (a king) consider (a man's) good qualities, as well as his faults, and then judge (of his character) by that which prevails.

“பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.”
— திருக்குறள் 505 · தெரிந்துதெளிதல்

A man's deeds are the touchstone of his greatness and littleness.

“அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி.”
— திருக்குறள் 506 · தெரிந்துதெளிதல்

Let (a king) avoid choosing men who have no relations; such men have no attachment, and therefore have no fear of crime.

“காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும்.”
— திருக்குறள் 507 · தெரிந்துதெளிதல்

To choose ignorant men, through partiality, is the height of folly.

“தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்”
— திருக்குறள் 508 · தெரிந்துதெளிதல்

Sorrow that will not leave even his posterity will come upon him chooses a stranger whose character he has not known.

“தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.”
— திருக்குறள் 509 · தெரிந்துதெளிதல்

Let (a king) choose no one without previous consideration; after he has made his choice, let him unhesitatingly select for each such duties as are appropriate.

“தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.”
— திருக்குறள் 510 · தெரிந்துதெளிதல்

To make choice of one who has not been examined, and to entertain doubts respecting one who has been chosen, will produce irremediable sorrow.