Skip to content
Thamizh Koodam — A global home for Tamil culture and community

47. Acting after due Consideration

தெரிந்துசெயல்வகை

Wealth (பொருட்பால்) · Royalty (அரசியல்) · kurals 461–470
Kural number
Show beside each kural
“அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.”
— திருக்குறள் 461 · தெரிந்துசெயல்வகை

Let a man reflect on what will be lost, what will be acquired and (from these) what will be his ultimate gain, and (then, let him) act.

“தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்.”
— திருக்குறள் 462 · தெரிந்துசெயல்வகை

There is nothing too difficult to (be attained by) those who, before they act, reflect well themselves, and thoroughly consider (the matter) with chosen friends.

“ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்.”
— திருக்குறள் 463 · தெரிந்துசெயல்வகை

Wise men will not, in the hopes of profit, undertake works that will consume their principal.

“தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்.”
— திருக்குறள் 464 · தெரிந்துசெயல்வகை

Those who fear reproach will not commence anything which has not been (thoroughly considered) and made clear to them.

“வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு”
— திருக்குறள் 465 · தெரிந்துசெயல்வகை

One way to promote the prosperity of an enemy, is (for a king) to set out (to war) without having thoroughly weighed his ability (to cope with its chances).

“செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.”
— திருக்குறள் 466 · தெரிந்துசெயல்வகை

He will perish who does not what is not fit to do; and he also will perish who does not do what it is fit to do.

“எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.”
— திருக்குறள் 467 · தெரிந்துசெயல்வகை

Consider, and then undertake a matter; after having undertaken it, to say "We will consider," is folly.

“ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.”
— திருக்குறள் 468 · தெரிந்துசெயல்வகை

The work, which is not done by suitable methods, will fail though many stand to uphold it.

“நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை.”
— திருக்குறள் 469 · தெரிந்துசெயல்வகை

There are failures even in acting well, when it is done without knowing the various dispositions of men.

“எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
கொள்ளாத கொள்ளாது உலகு.”
— திருக்குறள் 470 · தெரிந்துசெயல்வகை

Let a man reflect, and do things which bring no reproach; the world will not approve, with him, of things which do not become of his position to adopt.