Skip to content
Thamizh Koodam — A global home for Tamil culture and community

46. Avoiding mean Associations

சிற்றினஞ்சேராமை

Wealth (பொருட்பால்) · Royalty (அரசியல்) · kurals 451–460
Kural number
Show beside each kural
“சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.”
— திருக்குறள் 451 · சிற்றினஞ்சேராமை

(True) greatness fears the society of the base; it is only the low - minded who will regard them as friends.

“நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு.”
— திருக்குறள் 452 · சிற்றினஞ்சேராமை

As water changes (its nature), from the nature of the soil (in which it flows), so will the character of men resemble that of their associates.

“மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படுஞ் சொல்.”
— திருக்குறள் 453 · சிற்றினஞ்சேராமை

The power of knowing is from the mind; (but) his character is from that of his associates.

“மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு.”
— திருக்குறள் 454 · சிற்றினஞ்சேராமை

Wisdom appears to rest in the mind, but it really exists to a man in his companions.

“மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்.”
— திருக்குறள் 455 · சிற்றினஞ்சேராமை

Chaste company is the staff on which come, these two things, viz, purity of mind and purity of conduct.

“மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை.”
— திருக்குறள் 456 · சிற்றினஞ்சேராமை

To the pure-minded there will be a good posterity. By those whose associates are pure, no deeds will be done that are not good.

“மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.”
— திருக்குறள் 457 · சிற்றினஞ்சேராமை

Goodness of mind will give wealth, and good society will bring with it all praise, to men.

“மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து.”
— திருக்குறள் 458 · சிற்றினஞ்சேராமை

Although they may have great (natural) goodness of mind, yet good society will tend to strengthen it.

“மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து.”
— திருக்குறள் 459 · சிற்றினஞ்சேராமை

Future bliss is (the result) of goodness of mind; and even this acquires strength from the society of the good.

“நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.”
— திருக்குறள் 460 · சிற்றினஞ்சேராமை

There is no greater help than the company of the good; there is no greater source of sorrow than the company of the wicked.