Skip to content
Thamizh Koodam — A global home for Tamil culture and community

37. Curbing of Desire

அவாவறுத்தல்

Virtue (அறத்துப்பால்) · Ascetic Virtue (துறவறவியல்) · kurals 361–370
Kural number
Show beside each kural
“அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.”
— திருக்குறள் 361 · அவாவறுத்தல்

(The wise) say that the seed, which produces unceasing births, at all times, to all creatures, is desire.

“வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.”
— திருக்குறள் 362 · அவாவறுத்தல்

If anything be desired, freedom from births should be desired; that (freedom from births) will be attained by desiring to be without desire.

“வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்பது இல்.”
— திருக்குறள் 363 · அவாவறுத்தல்

There is in this world no excellence equal to freedom from desire; and even in that world, there is nothing like it.

“தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்.”
— திருக்குறள் 364 · அவாவறுத்தல்

Purity (of mind) consists in freedom from desire; and that (freedom from desire) is the fruit of the love of truth.

“அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர்.”
— திருக்குறள் 365 · அவாவறுத்தல்

They are said to be free (from future birth) who are freed from desire; all others (who, whatever else they may be free from, are not freed from desire) are not thus free.

“அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா.”
— திருக்குறள் 366 · அவாவறுத்தல்

It is the chief duty of (an ascetic) to watch against desire with (jealous) fear; for it has power to deceive (and destroy) him.

“அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்.”
— திருக்குறள் 367 · அவாவறுத்தல்

If a man thoroughly cut off all desire, the deeds, which confer immortality, will come to him, in the path in which he seeks them.

“அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.”
— திருக்குறள் 368 · அவாவறுத்தல்

There is no sorrow to those who are without desire; but where that is, (sorrow) will incessantly come, more and more.

“இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.”
— திருக்குறள் 369 · அவாவறுத்தல்

Even while in this body, joy will never depart (from the mind, in which) desire, that sorrow of sorrows, has been destroyed.

“ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.”
— திருக்குறள் 370 · அவாவறுத்தல்

The removal of desire, whose nature it is never to be satisfied, will immediately confer a nature that can never be changed.