Skip to content
Thamizh Koodam — A global home for Tamil culture and community

30. Veracity

வாய்மை

Virtue (அறத்துப்பால்) · Ascetic Virtue (துறவறவியல்) · kurals 291–300
Kural number
Show beside each kural
“வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.”
— திருக்குறள் 291 · வாய்மை

Truth is the speaking of such words as are free from the least degree of evil (to others).

“பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.”
— திருக்குறள் 292 · வாய்மை

Even falsehood has the nature of truth, if it confer a benefit that is free from fault.

“தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.”
— திருக்குறள் 293 · வாய்மை

Let not a man knowingly tell a lie; for after he has told the lie, his mind will burn him (with the memory of his guilt).

“உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.”
— திருக்குறள் 294 · வாய்மை

He who, in his conduct, preserves a mind free from deceit, will dwell in the minds of all men.

“மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.”
— திருக்குறள் 295 · வாய்மை

He, who speaks truth with all his heart, is superior to those who make gifts and practise austerities.

“பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்.”
— திருக்குறள் 296 · வாய்மை

There is no praise like the praise of never uttering a falsehood: without causing any suffering, it will lead to every virtue.

“பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.”
— திருக்குறள் 297 · வாய்மை

If a man has the power to abstain from falsehood, it will be well with him, even though he practise no other virtue.

“புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.”
— திருக்குறள் 298 · வாய்மை

Purity of body is produced by water and purity of mind by truthfulness.

“எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.”
— திருக்குறள் 299 · வாய்மை

All lamps of nature are not lamps; the lamp of truth is the lamp of the wise.

“யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.”
— திருக்குறள் 300 · வாய்மை

Amidst all that we have seen (described) as real (excellence), there is nothing so good as truthfulness.