Skip to content
Thamizh Koodam — A global home for Tamil culture and community

29. The Absence of Fraud

கள்ளாமை

Virtue (அறத்துப்பால்) · Ascetic Virtue (துறவறவியல்) · kurals 281–290
Kural number
Show beside each kural
“எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.”
— திருக்குறள் 281 · கள்ளாமை

Let him, who desires not to be despised, keep his mind from (the desire of) defrauding another of the smallest thing.

“உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.”
— திருக்குறள் 282 · கள்ளாமை

Even the thought (of sin) is sin; think not then of crafiily stealing the property of another.

“களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.”
— திருக்குறள் 283 · கள்ளாமை

The property, which is acquired by fraud, will entirely perish, even while it seems to increase.

“களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.”
— திருக்குறள் 284 · கள்ளாமை

The eager desire of defrauding others will, when it brings forth its fruit, produce undying sorrow.

“அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.”
— திருக்குறள் 285 · கள்ளாமை

The study of kindness and the exercise of benevolence is not with those who watch for another's forgetfulness, though desire of his property.

“அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.”
— திருக்குறள் 286 · கள்ளாமை

They cannot walk steadfastly, according to rule, who eagerly desire to defraud others.

“களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண்ட இல்.”
— திருக்குறள் 287 · கள்ளாமை

That black-knowledge which is called fraud, is not in those who desire that greatness which is called rectitude.

“அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு.”
— திருக்குறள் 288 · கள்ளாமை

Deceit dwells in the mind of those who are conversant with fraud, even as virtue in the minds of those who are conversant with rectitude.

“அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்.”
— திருக்குறள் 289 · கள்ளாமை

Those, who are acquainted with nothing but fraud, will perish in the very commission of transgression.

“கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்
தள்ளாது புத்தே ளுளகு.”
— திருக்குறள் 290 · கள்ளாமை

Even their body will fail the fraudulent; but even the world of the gods will not fail those who are free from fraud.