Skip to content
Thamizh Koodam — A global home for Tamil culture and community

20. Against Vain Speaking

பயனில சொல்லாமை

Virtue (அறத்துப்பால்) · Domestic Virtue (இல்லறவியல்) · kurals 191–200
Kural number
Show beside each kural
“பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.”
— திருக்குறள் 191 · பயனில சொல்லாமை

He who to the disgust of many speaks useless things will be despised by all.

“பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலிற் றீது.”
— திருக்குறள் 192 · பயனில சொல்லாமை

To speak useless things in the presence of many is a greater evil than to do unkind things towards friends.

“நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.”
— திருக்குறள் 193 · பயனில சொல்லாமை

That conversation in which a man utters forth useless things will say of him "he is without virtue."

“நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து.”
— திருக்குறள் 194 · பயனில சொல்லாமை

The words devoid of profit or pleasure which a man speaks will, being inconsistent with virtue, remove him from goodness.

“சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்.”
— திருக்குறள் 195 · பயனில சொல்லாமை

If the good speak vain words their eminence and excellence will leave them.

“பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்.”
— திருக்குறள் 196 · பயனில சொல்லாமை

Call not him a man who parades forth his empty words. Call him the chaff of men.

“நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.”
— திருக்குறள் 197 · பயனில சொல்லாமை

Let the wise if they will, speak things without excellence; it will be well for them not to speak useless things.

“அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.”
— திருக்குறள் 198 · பயனில சொல்லாமை

The wise who seek after rare pleasures will not speak words that have not much weight in them.

“பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.”
— திருக்குறள் 199 · பயனில சொல்லாமை

Those wise men who are without faults and are freed from ignorance will not even forgetfully speak things that profit not.

“சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.”
— திருக்குறள் 200 · பயனில சொல்லாமை

Speak what is useful, and speak not useless words.