Skip to content
Thamizh Koodam — A global home for Tamil culture and community

13. The Possession of Self-restraint

அடக்கமுடைமை

Virtue (அறத்துப்பால்) · Domestic Virtue (இல்லறவியல்) · kurals 121–130
Kural number
Show beside each kural
“அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.”
— திருக்குறள் 121 · அடக்கமுடைமை

Self-control will place (a man) among the Gods; the want of it will drive (him) into the thickest darkness (of hell).

“காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.”
— திருக்குறள் 122 · அடக்கமுடைமை

Let self-control be guarded as a treasure; there is no greater source of good for man than that.

“செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.”
— திருக்குறள் 123 · அடக்கமுடைமை

Knowing that self-control is knowledge, if a man should control himself, in the prescribed course, such self-control will bring him distinction among the wise.

“நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.”
— திருக்குறள் 124 · அடக்கமுடைமை

More lofty than a mountain will be the greatness of that man who without swerving from his domestic state, controls himself.

“எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.”
— திருக்குறள் 125 · அடக்கமுடைமை

Humility is good in all; but especially in the rich it is (the excellence of) higher riches.

“ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து”
— திருக்குறள் 126 · அடக்கமுடைமை

Should one throughout a single birth, like a tortoise keep in his five senses, the fruit of it will prove a safe-guard to him throughout the seven-fold births.

“யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.”
— திருக்குறள் 127 · அடக்கமுடைமை

Whatever besides you leave unguarded, guard your tongue; otherwise errors of speech and the consequent misery will ensue.

“ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.”
— திருக்குறள் 128 · அடக்கமுடைமை

If a man's speech be productive of a single evil, all the good by him will be turned into evil.

“தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.”
— திருக்குறள் 129 · அடக்கமுடைமை

The wound which has been burnt in by fire may heal, but a wound burnt in by the tongue will never heal.

“கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.”
— திருக்குறள் 130 · அடக்கமுடைமை

Virtue, seeking for an opportunity, will come into the path of that man who, possessed of learning and self-control, guards himself against anger.