Skip to content
Thamizh Koodam — A global home for Tamil culture and community

128. The Reading of the Signs

குறிப்பறிவுறுத்தல்

Love (காமத்துப்பால்) · The Post-marital love (கற்பியல்) · kurals 1271–1280
Kural number
Show beside each kural
“கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன் றுண்டு.”
— திருக்குறள் 1271 · குறிப்பறிவுறுத்தல்

Though you would conceal (your feelings), your painted eyes would not, for, transgressing (their bounds), they tell (me) something.

“கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
பெண்நிறைந்த நீர்மை பெரிது.”
— திருக்குறள் 1272 · குறிப்பறிவுறுத்தல்

Unusually great is the female simplicity of your maid whose beauty fills my eyes and whose shoulders resemble the bamboo.

“மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன்று உண்டு.”
— திருக்குறள் 1273 · குறிப்பறிவுறுத்தல்

There is something that is implied in the beauty of this woman, like the thread that is visible in a garland of gems.

“முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.”
— திருக்குறள் 1274 · குறிப்பறிவுறுத்தல்

There is something in the unmatured smile of this maid like the fragrance that is contained in an unblossomed bud.

“செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன்று உடைத்து.”
— திருக்குறள் 1275 · குறிப்பறிவுறுத்தல்

The well-meant departure of her whose bangles are tight-fitting contains a remedy that can cure my great sorrow.

“பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து.”
— திருக்குறள் 1276 · குறிப்பறிவுறுத்தல்

The embrace that fills me with comfort and gladness is capable of enduring (my former) sorrow and meditating on his want of love.

“தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை.”
— திருக்குறள் 1277 · குறிப்பறிவுறுத்தல்

My bracelets have understood before me the (mental) separation of him who rules the cool seashore.

“நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து.”
— திருக்குறள் 1278 · குறிப்பறிவுறுத்தல்

It was but yesterday my lover departed (from me); and it is seven days since my complexion turned sallow.

“தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது.”
— திருக்குறள் 1279 · குறிப்பறிவுறுத்தல்

She looked at her bracelets, her tender shoulders, and her feet; this was what she did there (significantly).

“பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு.”
— திருக்குறள் 1280 · குறிப்பறிவுறுத்தல்

To express their love-sickness by their eyes and resort to begging bespeaks more than ordinary female excellence.