Skip to content
Thamizh Koodam — A global home for Tamil culture and community

11. Gratitude

செய்ந்நன்றி அறிதல்

Virtue (அறத்துப்பால்) · Domestic Virtue (இல்லறவியல்) · kurals 101–110
Kural number
Show beside each kural
“செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.”
— திருக்குறள் 101 · செய்ந்நன்றி அறிதல்

(The gift of) heaven and earth is not an equivalent for a benefit which is conferred where none had been received.

“காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.”
— திருக்குறள் 102 · செய்ந்நன்றி அறிதல்

A favour conferred in the time of need, though it be small (in itself), is (in value) much larger than the world.

“பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.”
— திருக்குறள் 103 · செய்ந்நன்றி அறிதல்

If we weigh the excellence of a benefit which is conferred without weighing the return, it is larger than the sea.

“தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.”
— திருக்குறள் 104 · செய்ந்நன்றி அறிதல்

Though the benefit conferred be as small as a millet seed, those who know its advantage will consider it as large as a palmyra fruit.

“உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.”
— திருக்குறள் 105 · செய்ந்நன்றி அறிதல்

The benefit itself is not the measure of the benefit; the worth of those who have received it is its measure.

“மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.”
— திருக்குறள் 106 · செய்ந்நன்றி அறிதல்

Forsake not the friendship of those who have been your staff in adversity. Forget not be benevolence of the blameless.

“எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.”
— திருக்குறள் 107 · செய்ந்நன்றி அறிதல்

(The wise) will remember throughout their seven-fold births the love of those who have wiped away their affliction.

“நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.”
— திருக்குறள் 108 · செய்ந்நன்றி அறிதல்

It is not good to forget a benefit; it is good to forget an injury even in the very moment (in which it is inflicted).

“கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.”
— திருக்குறள் 109 · செய்ந்நன்றி அறிதல்

Though one inflict an injury great as murder, it will perish before the thought of one benefit (formerly) conferred.

“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.”
— திருக்குறள் 110 · செய்ந்நன்றி அறிதல்

He who has killed every virtue may yet escape; there is no escape for him who has killed a benefit.