“கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற.”
True modesty is the fear of (evil) deeds; all other modesty is (simply) the bashfulness of virtuous maids.
நாணுடைமை
“கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற.”
True modesty is the fear of (evil) deeds; all other modesty is (simply) the bashfulness of virtuous maids.
“ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு.”
Food, clothing and the like are common to all men but modesty is peculiar to the good.
“ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்
நன்மை குறித்தது சால்பு.”
As the body is the abode of the spirit, so the excellence of modesty is the abode of perfection.
“அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணிஅன்றோ பீடு நடை”
Is not the modesty ornament of the noble ? Without it, their haughtiness would be a pain (to others).
“பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு.”
The world regards as the abode of modesty him who fear his own and other's guilt.
“நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர்.”
The great make modesty their barrier (of defence) and not the wide world.
“நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்.”
The modest would rather lose their life for the sake of modesty than lose modesty for the sake of life.
“பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து.”
Virtue is likely to forsake him who shamelessly does what others are ashamed of.
“குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை.”
Want of manners injures one's family; but want of modesty injures one's character.
“நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று.”
The actions of those who are without modesty at heart are like those of puppet moved by a string.