Skip to content
Thamizh Koodam — A global home for Tamil culture and community

101. Wealth without Benefaction

நன்றியில்செல்வம்

Wealth (பொருட்பால்) · Civil (குடியியல்) · kurals 1001–1010
Kural number
Show beside each kural
“வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்.”
— திருக்குறள் 1001 · நன்றியில்செல்வம்

He who does not enjoy the immense riches he has heaped up in his house, is (to be reckoned as) dead, (for) there is nothing achieved (by him).

“பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு.”
— திருக்குறள் 1002 · நன்றியில்செல்வம்

He who knows that wealth yields every pleasure and yet is so blind as to lead miserly life will be born a demon.

“ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை.”
— திருக்குறள் 1003 · நன்றியில்செல்வம்

A burden to the earth are men bent on the acquisition of riches and not (true) fame.

“எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்.”
— திருக்குறள் 1004 · நன்றியில்செல்வம்

What will the miser who is not liked (by any one) regard as his own (in the world to come) ?

“கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடியுண் டாயினும் இல்.”
— திருக்குறள் 1005 · நன்றியில்செல்வம்

Those who neither give (to others) nor enjoy (their property) are (truly) destitute, though possessing immense riches.

“ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலா தான்.”
— திருக்குறள் 1006 · நன்றியில்செல்வம்

He who enjoys not (his riches) nor relieves the wants of the worthy is a disease to his wealth.

“அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று.”
— திருக்குறள் 1007 · நன்றியில்செல்வம்

The wealth of him who never bestows anything on the destitute is like a woman of beauty growing old without a husband.

“நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று.”
— திருக்குறள் 1008 · நன்றியில்செல்வம்

The wealth of him who is disliked (by all) is like the fruit-bearing of the etty tree in the midst of a town.

“அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்.”
— திருக்குறள் 1009 · நன்றியில்செல்வம்

Strangers will inherit the riches that have been acquired without regard for friendship, comfort and charity.

“சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனையது உடைத்து.”
— திருக்குறள் 1010 · நன்றியில்செல்வம்

The short-lived poverty of those who are noble and rich is like the clouds becoming poor (for a while).