Skip to content
Thamizh Koodam — A global home for Tamil culture and community

78. Military Spirit

படைச்செருக்கு

Wealth (பொருட்பால்) · The Excellence of an Army (படையில்) · kurals 771–780
Kural number
Show beside each kural
“என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்நின்று கல்நின் றவர்.”
— திருக்குறள் 771 · படைச்செருக்கு

O my foes, stand not before my leader; (for) many are those who did so but afterwards stood (in the shape of) statues.

“கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.”
— திருக்குறள் 772 · படைச்செருக்கு

It is more pleasant to hold the dart that has missed an elephant than that which has hit hare in the forest.

“பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு.”
— திருக்குறள் 773 · படைச்செருக்கு

The learned say that fierceness (incontest with a foe) is indeed great valour; but to become a benefactor in case of accident (to a foe) is the extreme (limit) of that valour.

“கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.”
— திருக்குறள் 774 · படைச்செருக்கு

The hero who after casting the lance in his hand on an elephant, comes (in search of another) will pluck the one (that sticks) in his body and laugh (exultingly).

“விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.”
— திருக்குறள் 775 · படைச்செருக்கு

Is it not a defeat to the valiant to wink and destroy their ferocious look when a lance in cast at them (by their foe) ?

“விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து.”
— திருக்குறள் 776 · படைச்செருக்கு

The hero will reckon among wasted days all those on which he had not received severe wounds.

“சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து.”
— திருக்குறள் 777 · படைச்செருக்கு

The fastening of ankle-ring by those who disire a world-wide renown and not (the safety of) their lives is like adorning (themselves).

“உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர்குன்றல் இலர்.”
— திருக்குறள் 778 · படைச்செருக்கு

The heroes who are not afraid of losing their life in a contest will not cool their ardour, even if the king prohibits (their fighting).

“இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர்.”
— திருக்குறள் 779 · படைச்செருக்கு

Who would reproach with failure those who seal their oath with their death ?

“புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து.”
— திருக்குறள் 780 · படைச்செருக்கு

If (heroes) can so die as to fill with tears the eyes of their rulers, such a death deserves to be obtained even by begging.