Skip to content
Thamizh Koodam — A global home for Tamil culture and community

74. The Land

நாடு

Wealth (பொருட்பால்) · The Essentials of a State (அரணியல்) · kurals 731–740
Kural number
Show beside each kural
“தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு.”
— திருக்குறள் 731 · நாடு

A kingdom is that in which (those who carry on) a complete cultivation, virtuous persons, and merchants with inexhaustible wealth, dwell together.

“பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு.”
— திருக்குறள் 732 · நாடு

A kingdom is that which is desire for its immense wealth, and which grows greatly in prosperity, being free from destructive causes.

“பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறையொருங்கு நேர்வது நாடு.”
— திருக்குறள் 733 · நாடு

A kingdom is that which can bear any burden that may be pressed on it (from adjoining kingdoms) and (yet) pay the full tribute to its sovereign.

“உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு.”
— திருக்குறள் 734 · நாடு

A kingdom is that which continues to be free from excessive starvation, irremediable epidemics, and destructive foes.

“பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லத நாடு.”
— திருக்குறள் 735 · நாடு

A kingdom is that which is without various (irregular) associations, destructive internal enemies, and murderous savages who (sometimes) harass the sovereign.

“கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை.”
— திருக்குறள் 736 · நாடு

The learned say that the best kingdom is that which knows no evil (from its foes), and, if injured (at all), suffers no diminution in its fruitfulness.

“இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.”
— திருக்குறள் 737 · நாடு

The constituents of a kingdom are the two waters (from above and below), well situated hills and an undestructible fort.

“பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து.”
— திருக்குறள் 738 · நாடு

Freedom from epidemics, wealth, produce, happiness and protection (to subjects); these five, the learned, say, are the ornaments of a kingdom.

“நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு.”
— திருக்குறள் 739 · நாடு

The learned say that those are kingdom whose wealth is not laboured for, and those not, whose wealth is only obtained through labour.

“ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு.”
— திருக்குறள் 740 · நாடு

Although in possession of all the above mentioned excellences, these are indeed of no use to a country, in the absence of harmony between the sovereign and the sujects.