Skip to content
Thamizh Koodam — A global home for Tamil culture and community

72. The Knowledge of the Council Chamber

அவையறிதல்

Wealth (பொருட்பால்) · Ministers of State (அமைச்சியல்) · kurals 711–720
Kural number
Show beside each kural
“அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.”
— திருக்குறள் 711 · அவையறிதல்

Let the pure who know the arrangement of words speak with deliberation after ascertaining (the nature of) the court (then assembled).

“இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர்.”
— திருக்குறள் 712 · அவையறிதல்

Let the good who know the uses of words speak with a clear knowledge after ascertaining the time (suited to the court).

“அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல்.”
— திருக்குறள் 713 · அவையறிதல்

Those who undertake to speak without knowing the (nature of the) court are ignorant of the quality of words as well as devoid of the power (of learning).

“ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல்.”
— திருக்குறள் 714 · அவையறிதல்

Ministers should be lights in the assembly of the enlightned, but assume the pure whiteness of mortar (ignorance) in that of fools.

“நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு.”
— திருக்குறள் 715 · அவையறிதல்

The modesty by which one does not rush forward and speak in (an assembly of) superiors is the best among all (one's) good qualities.

“ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு.”
— திருக்குறள் 716 · அவையறிதல்

(For a minister) to blunder in the presence of those who have acquired a vast store of learning and know (the value thereof) is like a good man stumbling (and falling away) from the path (of virtue).

“கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லார் அகத்து.”
— திருக்குறள் 717 · அவையறிதல்

The learning of those who have read and understood (much) will shine in the assembly of those who faultlessly examine (the nature of) words.

“உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று.”
— திருக்குறள் 718 · அவையறிதல்

Lecturing to those who have the ability to understand (for themselves) is like watering a bed of plants that are growing (of themselves).

“புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்குசலச் சொல்லு வார்.”
— திருக்குறள் 719 · அவையறிதல்

Those who are able to speak good things impressively in an assembly of the good should not even forgetfully speak them in that of the low.

“அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொளல்.”
— திருக்குறள் 720 · அவையறிதல்

To utter (a good word) in the assembly of those who are of inferior rank is like dropping nectar on the ground.