Skip to content
Thamizh Koodam — A global home for Tamil culture and community

70. Conduct in the Presence of the King

மன்னரைச் சேர்ந்தொழுதல்

Wealth (பொருட்பால்) · Ministers of State (அமைச்சியல்) · kurals 691–700
Kural number
Show beside each kural
“அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.”
— திருக்குறள் 691 · மன்னரைச் சேர்ந்தொழுதல்

Ministers who serve under fickle-minded monarchs should, like those who warm themselves at the fire, be neither (too) far, nor (too) near.

“மன்னர் விழைப விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கந் தரும்.”
— திருக்குறள் 692 · மன்னரைச் சேர்ந்தொழுதல்

For ministers not to cover the things desired by their kings will through the kings themselves yield them everlasting wealth.

“போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது.”
— திருக்குறள் 693 · மன்னரைச் சேர்ந்தொழுதல்

Ministers who would save themselves should avoid (the commission of) serious errors for if the king's suspicion is once roused, no one can remove it.

“செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியா ரகத்து.”
— திருக்குறள் 694 · மன்னரைச் சேர்ந்தொழுதல்

While in the presence of the sovereign, ministers should neither whisper to nor smile at others.

“எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை.”
— திருக்குறள் 695 · மன்னரைச் சேர்ந்தொழுதல்

(When the king is engaged) in secret counsel (with others), ministers should neither over-hear anything whatever nor pry into it with inquisitive questions, but (wait to) listen when it is divulged (by the king himself).

“குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல்.”
— திருக்குறள் 696 · மன்னரைச் சேர்ந்தொழுதல்

Knowing the (king's disposition and seeking the right time, (the minister) should in a pleasing manner suggest things such as are desirable and not disagreeable.

“வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்.”
— திருக்குறள் 697 · மன்னரைச் சேர்ந்தொழுதல்

Ministers should (always) give agreeable advice but on no occasion recommend useless actions, though requested (to do so).

“இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும்.”
— திருக்குறள் 698 · மன்னரைச் சேர்ந்தொழுதல்

Ministers should behave in accordance with the (Divine) light in the person of kings and not despise them saying, "He is our junior (in age) and connected with our family!".

“கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்.”
— திருக்குறள் 699 · மன்னரைச் சேர்ந்தொழுதல்

Those whose judgement is firm will not do what is disagreeable (to the sovereign) saying (within themselves) "We are esteemed by the king".

“பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்.”
— திருக்குறள் 700 · மன்னரைச் சேர்ந்தொழுதல்

The (foolish) claim with which a minister does unbecoming acts because of his (long) familiarity (with the king) will ensure his ruin.