Skip to content
Thamizh Koodam — A global home for Tamil culture and community

67. Power in Action

வினைத்திட்பம்

Wealth (பொருட்பால்) · Ministers of State (அமைச்சியல்) · kurals 661–670
Kural number
Show beside each kural
“வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.”
— திருக்குறள் 661 · வினைத்திட்பம்

Firmness in action is (simply) one's firmness of mind; all other (abilities) are not of this nature.

“ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.”
— திருக்குறள் 662 · வினைத்திட்பம்

Not to perform a ruinous act, and not to be discouraged by the ruinous termination of an act, are the two maxims which, the wise say, from the principles of those who have investigated the subject.

“கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும்.”
— திருக்குறள் 663 · வினைத்திட்பம்

So to perform an act as to publish it (only) at its termination is (true) manliness; for to announce it beforehand, will cause irremediable sorrow.

“சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.”
— திருக்குறள் 664 · வினைத்திட்பம்

To say (how an act is to be performed) is (indeed) easy for any one; but far difficult it is to do according to what has been said.

“வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும்.”
— திருக்குறள் 665 · வினைத்திட்பம்

The firmness in action of those who have become great by the excellence (of their counsel) will, by attaining its fulfilment in the person of the king, be esteemed (by all).

“எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.”
— திருக்குறள் 666 · வினைத்திட்பம்

If those who have planned (an undertaking) possess firmness (in executing it) they will obtain what they have desired even as they have desired it.

“உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.”
— திருக்குறள் 667 · வினைத்திட்பம்

Let none be despised for (their) size; (for) the world has those who resemble the linch-pin of the big rolling car.

“கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்.”
— திருக்குறள் 668 · வினைத்திட்பம்

An act that has been firmly resolved on must be as firmly carried out without delay.

“துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை.”
— திருக்குறள் 669 · வினைத்திட்பம்

Though it should cause increasing sorrow (at the outset), do with firmness the act that yield bliss (in the end).

“எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு.”
— திருக்குறள் 670 · வினைத்திட்பம்

The great will not esteem those who esteem not firmness of action, whatever other abilities the latter may possess.